நாளை உருவாகிறது டவ்-தே புயல் : தமிழகத்தில் மிக கனமழை அலர்ட்; 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் சூறைக் காற்று வீசும்!!

சென்னை : லட்சத்தீவு பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவடைந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் தொடர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் டவ் -தே புயலாக வலுவடைய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாவதால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கலில் இடி, மின்னல் சூறைக் காற்றுடன் மிக பலத்த மழை பெய்யும் என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் தென்காசி, நெல்லை, குமரி, திருப்பூர், நாமக்கல், சேலத்தில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்கத்தின் இதர மாவட்டங்கள் புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாளை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசியில் பலத்த மழை பெய்யக் கூடும்.மே 16,17,18 தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னையில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது.குமரிக்கடல் மன்னார் வளைகுடா தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவில் சூறாவளி வீசும்.அடுத்த 3 நாட்களுக்கு 45 முதல் 65 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: