கர்நாடக மாநிலத்தில் பழங்குடி மக்களுக்கு கொரோனா தொற்று: மருத்துவமனை வாசல் மிதிக்கமாட்டோம் என்று வீராப்பு

பெங்களூரு: கர்நாடகா வனப்பகுதிகளில் வாழும் பழங்குடி மக்கள் சிலரும் கொரோனா இரண்டாவது தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆதிவாசிகள், பழங்குடியின வகுப்பினர்,  நாடோடிகள், ஆடு மேய்ப்பவர்கள், தேன் எடுப்பவர்கள் ஆகியோர் மக்களுடன்  சேர்ந்து வாழாமல் தனித்து வாழ்வதால் கொரோனா முதல் அலையில் பாதிப்பின்றி இருந்தனர். ஆனால் தற்போது  மக்களை அலைக்கழித்து வரும் இரண்டாவது அலை ஆதிவாசிகளையும் விட்டு  வைக்கவில்லை. கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தின் சோலிகரு மற்றும் குடகு  மாவட்டத்தின் தேன்குருபர் வகுப்பினர் வாழும் பகுதியில் சிலருக்கு தொற்று  பாசிடிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் யாரும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறாமல்  உள்ளனர்.

தொற்று பரவல் ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு சுகாதார துறை  அதிகாரிகள் நேரில் சென்று சிகிச்சை பெற வலியுறுத்தியும் மறுத்து  வருகிறார்கள். தற்போது 20க்கும் மேற்பட்டவர்களுக்கு பாசிடிவ் உள்ளது.  அவர்கள் சிகிச்சை எடுக்க தவறினால் மேலும் பலருக்கு தொற்று பரவும் என்ற  ஆதங்கம் அதிகாரிகளுக்கு உள்ளது. இதுவரை எந்த நோய்க்கும் மருத்துவமனை வாசலை  மிதக்காத நாங்கள், கொரோனாவுக்கும் மருத்துவமனை வரமாட்டோம். அதை எப்படி  குணமாக்க வேண்டும் என்பது தெரியும் என்று வீராப்பாக பேசி அதிகாரிகளை  அனுப்பி வைத்து வருகிறார்கள்.

Related Stories:

>