கொரோனா நிவாரண நிதிக்கு சிட்டி யூனியன் வங்கி ரூ.1 கோடி

சென்னை: தமிழக முதல்வரின் கொரோனா தடுப்பு பொது நிவாரண நிதிக்கு சிட்டி யூனியன் வங்கி ரூ.1 கோடி அளிப்பதாக தெரிவித்துள்ளது.இது குறித்து சிட்டி யூனியன் வங்கி வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்றின் கோர தாண்டவம் சென்ற ஆண்டு தொடங்கியதில் இருந்து கடந்த மார்ச் 31ம் தேதி நிறைவடைந்த நிதி ஆண்டில் சிட்டி யூனியன் வங்கி அரசுத்துறைகள் மற்றும்  தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்திற்காக சுமார் ரூ.1.20 கோடி சமூக பொறுப்பு நிதி மூலம் செலவிடப்பட்டது. அதன் மூலம் பொது மக்கள் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள், சானிடைசர்  மற்றும் நிவாரண பொருட்கள் வழங்குதல், கும்பகோணத்தில் கொரோனா பராமரிப்பு நிலையத்தில் கழிவறை, குளியலறை மற்றும் தடுப்புகள் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்த நிதி ஆண்டில் கொரோனா இரண்டாம் அலையில் கொரோனா நிவாரண செயல்பாட்டிற்காக அரசு துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் திருநெல்வேலி கொரோனா நிவாரணம்,  கும்பகோணம் நகராட்சி மூலம் ஆக்சிஜன் மீட்டர் வழங்குதல், தஞ்சை மாவட்ட ஆட்சியர் மூலம் ஆக்சிஜன் மீட்டர் வழங்குதல் உள்ளிட்ட பணிகளுக்காக ரூ.137 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது.  மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  விடுத்த கோரிக்கையின் பேரில் சமுதாய பொறுப்புணர்வு நிதி மூலம் சிட்டி யூனியன் வங்கி ₹1 கோடி வழங்கியுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: