வெளிநாட்டிலிருந்து நன்கொடையாக பெறப்படும் கொரோனா நிவாரண பொருட்களை கண்காணிக்க 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்: அரசு உத்தரவு

சென்னை:நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி நன்கொடையாக வெளிநாடுகளில் இருந்து நிவாரண பொருட்கள் வழங்கப்படடுகிறது.  இவ்வாறு, வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக இறக்குமதி செய்யப்படும் கொரோனா நிவாரண  பொருட்களுக்கு ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பல அறக்கட்டளை அமைப்புகள், பெரு நிறுவனங்கள், வெளிநாடுகளில் உள்ள சங்கங்கள், மற்றும் நிறுவனங்களிடமிருந்து வேண்டுகோள்  விடுத்தது. அதன்படி நன்கொடையாக இறக்குமதி செய்யப்படும் கொரோனா நிவாரணப் பொருட்களுக்கு 2021 மே 3ம் தேதி முதல் ஐஜிஎஸ்டி வரியிலிருந்து தற்காலிகமாக விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், இந்த வரி  விலக்கு 2021 ஜூன் 30ம் தேதி வரை பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது.

இந்த வரி விலக்கை தொடர்பான நடவடிக்கையை கண்காணிக்க, மாநில அரசு சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அந்த அதிகாரி, நிவாரணம் அளிக்கும் நிறுவனங்கள், அமைப்புகளுக்கு கொரோனா நிவாரண பொருட்களை இலவசமாக  வழங்க அனுமதி அளிக்கலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி நன்கொடையாக நிவாரண பொருட்களை இறக்குமதி செய்யும் பணிகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  சென்னை துறைமுகத்திற்கு வருவாய் நிர்வாக ஆணையர் அல்லது மாவட்ட கலெக்டர் ஆகியோர் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி எல் அன்ட் டி துறைமுகத்துக்கு  திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், சென்னை விமான நிலையம் - செங்கல்பட்டு மாவட்ட  கலெக்டர் கண்காணிப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதே போன்று  மதுரை, கோவை, திருச்சி, தூ்த்துக்குடி துறைமுகம் மற்றும் தூத்துக்கு  விமான நிலையத்துக்கு அந்தெந்த மாவட்ட கலெக்டர்களை நியமனம் செய்து வருவாய்த்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: