'நதிகளில் மனித உடல்கள், மருத்துவமனைகளில் நீண்ட வரிசை'பிரதமரே, கண்ணாடியை எடுத்துவிட்டு பாருங்கள்: ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: கொரோனா கோரத்தாண்டவத்தால் நாடு முழுவதும் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை பிரதமர் நரேந்திர மோடி கண்களை திறந்து பார்க்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை பெரும் இழப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தடுப்பூசி போடும் திட்டமும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளின் நிலைமை திகிலூட்டும் வகையில் உள்ளன. படுக்கைகள்  கிடைக்காத அளவிற்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோயாளிகளின்  நிலைமை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருவதால், ஆக்சிஜன் கிடைக்காமல் பலர் இறந்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்;  நதிகளில் எண்ணெற்ற மனித உடல்கள் அடித்துச் செல்லப்படுவதாகவும், மருத்துவமனைகளில் மைல் கணக்கில் வரிசைகள் நீண்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கை பாதுகாப்புக்கான உரிமை பறிக்கப்பட்டு இருப்பதாகவும், ராகுல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய இளஞ்சிவப்பு நிற கண்ணாடியை எடுத்துவிட்டு பார்க்க வேண்டும் என்று விமர்சனம் செய்திருக்கும் ராகுல் காந்தி, அப்போது தான் புதிய நாடாளுமன்ற விஸ்டா கட்டிடத்தை தவிர மற்ற காட்சிகளும் பிரதமரின் கண்களுக்கு புலப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories:

>