இறுதி ஊர்வலத்தில் சோகம்: கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதியதில் அமரர் ஊர்தியுடன் சென்ற 2 பேர் பலி: 7 பேர் காயம்

சென்னை: மதுராந்தகம் அருகே சடலத்தை எடுத்து சென்ற இறுதி ஊர்வல வாகனத்தின் மீது  லாரி மோதி பின்னர் பைக் மீது மோதியதில் பைக் எரிந்தது.  மேலும் அமரர் வாகனத்துடன் ெசன்ற  2 பேர் உயிரிழந்தனர்.  7 பேர் காயமடைந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகில் உள்ள செங்குந்தர்பேட்டையை  சேர்ந்தவர் சுப்பிரமணி(65) . இவர் முதுமை காரணமாக,  நேற்று முன் தினம் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து,  மதுராந்தகம் அருகே உள்ள மோச்சேரி  இடுகாட்டில், அடக்கம் செய்வதற்காக,  அமரர் ஊர்தியில் அவரது உடலை  உறவினர்கள் நேற்று சென்று கொண்டு சென்றனர். சிலர் நடந்து சென்றனர். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சென்றபோது, சென்னையில் இருந்து, கொரியர்  பார்சல்களை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து,  அமரர் ஊர்தி மீது எதிர்பாராதவிதமாக  மோதியது. இதனால்,  சுப்ரமணியத்தின் சடலம் சாலையில் தூக்கி வீசப்பட்டது.  உடன் நடந்து சென்ற 2 பேர் உயிரிழந்தனர்.  

விபத்துக்கு காரணமான அந்த லாரி சென்னையிலிருந்து மேல்மருவத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரின் பைக் மீதும் மோதியது.

இதன் காரணமாக,  அந்த பைக் தீயில் எரிந்து நாசமானது. பலத்த தீக்காயம் அடைந்த அவ்வாலிபர்  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். அவர்களில், நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்த காசி(70), பரசுராமன்  (55) என்பவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். வழியில் காசி, பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவமனையில் பரசுராமன் இறந்தார்.  சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  நடைபெற்ற இந்த விபத்தின் காரணமாக, அப்பகுதியில், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் காயமடைந்த அனைவரும் செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து, மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>