வராக நதியில் வெள்ளப்பெருக்கு

பெரியகுளம்:  தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் 126.28 அடி உயர சோத்துப்பாறை அணை உள்ளது. இதன் நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தொடர் கோடை மழை காரணமாக அணை நிரம்பி வழிந்தது. இதனால்,  பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழையால் நேற்று சோத்துப்பாறை அணைக்கு வந்த 504 கன அடி நீரும் அப்படியே வராக நதியில் வெளியேற்றப்பட்டது. இதனால் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>