தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரம் நியமனம்

சென்னை: தமிழக அரசின் புதிய தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முக சுந்தரத்தை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆர்.சண்முக சுந்தரம், கடந்த 1996 – 2001ம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக்காலத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பதவி வகித்துள்ளார். சட்டம், கல்வி, சமூக அமைப்புகளில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் சண்முகசுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அரசு துறையில் பல்வேறு செயலாளர்கள், ஆணையர்கள், காவல்துறை ஆணையர்கள் என பலர் மாற்றப்பட்டு வருகின்றனர். சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் மாற்றப்பட்டு ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

Related Stories:

>