பொதுமக்களிடம் காவல் துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும்: டிஜிபி திரிபாதி அறிவுரை

சென்னை: முழு ஊரடங்கு நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் பொதுமக்களிடம் காவல் துறையினர் மிகுந்த கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும் என காவல்துறையினருக்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி அறிவுரை வழங்கியுள்ளார். எந்த சூழ்நிலையிலும் கோபமாகவோ, மரியாதை குறைவாகவோ மக்களிடம் நடந்து கொள்ளக்கூடாது எனவும் கூறியுள்ளார். நாளை முதல் முழு ஊரடங்கு அமலில் வர உள்ளது. ஆகையால் பொதுமக்கள் யாரும் வெளியே வர கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தல் செய்துள்ளது. மேலும் உத்தரவை மீறி வெளியே வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என கூறியிருந்தது.இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. நாளை (திங்கட்கிழமை) முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட உள்ளது.

இந்த ஊரடங்கில் பஸ்கள் ஓடாது; டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுகிறது.மேலும் நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் வாங்க நண்பகல் 12 மணி வரை கடைகள் திறந்து இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. நாளை முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நேற்றும் இன்றும் கடைகள் முழுமையாக திறக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நாளை முதல் மளிகை, பால், இறைச்சி கடைகள் நண்பகல் 12 மணி வரை திறந்திருக்கும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>