அசாம்: அசாம் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஹிமந்தா பஸ்வா இன்று தேர்வு செய்யப்பட உள்ளார். சமீபத்தில் தமிழ்நாடு, அசாம், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், 126 தொகுதிகளை உள்ளடக்கிய அசாம் மாநிலத்தில் தேர்தலில் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. இதில், 60 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்ற பாஜக முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலே தேர்தலை எதிர்கொண்டது. இதனால், முதலமைச்சர் யார் என்பது குறித்த விவாதம் எழுந்தது.