தமிழக சட்டப்பேரவை முன்னவராக துரைமுருகன் நியமனம்

சென்னை: தமிழக சட்டப்பேரவை முன்னவராக துரைமுருகனை நியமனம் செய்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுள்ளார். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவையில் சட்டப்பேரவை  முன்னவராக ஓ.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டிருந்தார்.  தற்போது அதிமுக 65 இடங்களை பிடித்து எதிர்க்கட்சி வரிசையில் அமர உள்ளது.

 ஆளும் கட்சியாக உள்ள திமுகவுக்கு அவை முன்னவர் பதவி வழங்கப்பட வேண்டும். இந்த நிலையில்,  தமிழக சட்டப்பேரவை முன்னவராக துரைமுருகனை நியமனம் செய்து சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நீர்வளத்துறை  அமைச்சர் துரைமுருகன் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன்னவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: