ராஜிவ்காந்தி, ஸ்டான்லி, ஓமந்தூரார் 3 மருத்துவமனையில் தயார் நிலையில் தீயணைப்பு வாகனம்: தீ விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

சென்னை: ராஜிவ்காந்தி, ஸ்டான்லி, ஓமந்தூரார் ஆகிய 3 மருத்துவமனையில் தயார் நிலையில் தீயணைப்பு வாகனம் தீ விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை  நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சென்ைன ராஜிவ்காந்தி, ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதையடுத்து மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ெவளி மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் தீவிபத்து ஏற்படாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனையில் முன்ெனச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து தீயணைப்பு அதிகாரிகள் கூறுகையில், அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதைப்போன்று நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்து வந்து ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்கு வெளியில் நின்று கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் வெளிமாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அவ்வப்போது தீவிபத்து ஏற்பட்டு உயிர்சேதம் ஏற்படுவதால் அதைப்ேபான்று தமிழகத்தில் எந்தவிதமான தீவிபத்தும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் அரசு மருத்துவமனைகளில் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>