கொரோனா பரவல் அதிகரிப்பு: கர்நாடகாவில் மே 10 முதல் 24 வரை கடும் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்

கர்நாடகா: கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால்  மே 10 முதல் மே 24 வரை முழு ஊரடங்கு அறிவித்து கர்நாடக அரசு அறிவித்துள்ளது.  மே 10-ம் தேதி காலை 6 மணி முதல் மே 24-ம் தேதி காலை 6 மணி வரை முழு ஏரடங்கு அமலில் இருக்கும் என மாநில் முதல்வர் எடியூரப்பா கூறினார். கடும் கட்டுப்பாடுகளுடன் 14 நாட்கள் முழு ஊரடங்கை கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் தொழிற்சாலைகள் மூடவும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த முழு ஊரடங்கின் போது பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 14 நாட்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மட்டும் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மளிகை. காய்கறி, இறைச்சி, பிற அத்தியாவசிய கடைகள் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு தினசரி அதிகரித்து வருகிறது. ஆகையால் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. டெல்லி. மும்பை, குஜராத், ஆந்திரா போன்றி பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனாவால் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் உயிாிழந்து வருகின்றனர். ஒரு பக்கம் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும் உயிரிாப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே கொரோனா பரவலை தடுக்க 14 நாள் முழு ஊரடங்கு பிறப்பித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>