பதவியேற்ற நாளிலேயே 5 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி!: ப.சிதம்பரம்

சென்னை: பதவியேற்ற நாளிலேயே 5 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கிண்டி ராஜ்பவனில் எளிமையான முறையில் பதவியேற்பு விழா நடந்தது. அவருடன் அமைச்சர்களும் பொறுப்பேற்று கொண்டனர். தொடர்ந்து, தலைமைச் செயலகம் வந்த முதல்வர் ஸ்டாலின், முதல் கையெழுத்தாக அனைவரும் எதிர்பார்த்தபடி, கொரோனா நிவாரணத்தில் முதல் தவணையாக ரூ.2,000 இம்மாதமே வழங்கப்படும். 

இம்மாதம் 16ம் தேதி முதல் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு. நாளை முதல் அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் இலவச பயணம். மக்களின் புகார் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்க புதிய துறை. முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை அரசே ஏற்கும் உள்ளிட்ட 5 அறிவிப்புக்களை அதிரடியாக வெளியிட்டார். இந்நிலையில், பதவியேற்ற நாளிலேயே 5 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தின் நிதி நிலைமையை சமாளிக்க சிறிது காலமாகும் என்று அவர் கருத்து தெரிவித்தார். தமிழக அரசின் நிதி நிலைமை சீராக இல்லை என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர்ந்திருப்பார் என்று நம்புகிறேன். நிதிநிலைமையை சீரமைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். நிதி நிலைமை சீராகும் போது தான் இன்னும் சில மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் எனவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டார். 

Related Stories: