பழகுநர் உரிமம் வழங்குவதில் 40 விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் அனுமதி: போக்குவரத்து ஆணையம் அறிவிப்பு

சென்னை: பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் தொடர்பான பணிகளுக்கு 40 விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் வரும் 20ம் தேதி வரை விதிக்கப்பட்டது. போக்குவரத்து துறையினை பொதுமக்கள், ஓட்டுநர்கள், வாகன உரிமையாளர்கள் தங்களது சேவைகளுக்கு போக்குவரத்து அரசு அலுவலகங்களுக்கு வந்து பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் தொடர்பான இதர பணிகளுக்கு பயன்பெற்று வருகின்றனர்.

தற்போது 50 விழுக்காடு அரசு பணியாளர்களுடன் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்து பணிகளின் சேவைகளை கொரோனா நோய் தொற்று பரவாமல் செய்ய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு விண்ணப்பதாரர்களை சாரதி இணைய தளத்தில் 50 விழுக்காடுகள் வரை முன்பதிவுகள் குறைக்கப்பட்டுள்ளன. பழகுநர் உரிமம் வழங்குவதில் 40 விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.அதேபோல், ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் தொடர்பான இதர பணிகளுக்கு 40 விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஓட்டுநர் உரிமம் தேர்வில் 30 விண்ணப்பதாரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கொரோனா நோய் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழிமுறைகளுடன் பொதுமக்களுக்கு சேவையாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories:

>