தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் மீதான சஸ்பெண்ட் உத்தரவு ரத்து: மீண்டும் பணியில் சேர்ந்தார்

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை  நீதிமன்றம், தேர்தல் ஆணைய உத்தரவுபடி. கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன்  நடந்தது. வெற்றி பெரும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பட்டாசுகள் வெடித்து கொண்டாடதடை விதித்திருந்தது.  ஆனால் தேனாம்பேட்டை காவல் எல்லையில் உள்ள அண்ணா அறிவாலயம் எதிரே தொண்டர்கள் சிலர் தங்களது கட்சி ஆட்சியை பிடித்த  மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

 அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தேனாம்ேபட்டை சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் முரளி தேர்தல் வெற்றியை பொது இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்களை தடுக்க தவறியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் தேர்தல் ஆணைய உத்தவுப்படி பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக இன்ஸ்பெக்டர் முரளியை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். அந்த  உத்தரவை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முரளி பணியில் இருந்து உடனே விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் முரளி மீது உயர் அதிகாரிகள் துறை ரீதியாக விசாரணை நடத்தி அதன் அறிக்கையை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பி வைத்தனர். அதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் முரளி மீதான சஸ்பெண்ட் உத்தரவை போலீஸ்  கமிஷனர் அதிரடியாக ரத்து செய்தும், மீண்டும் தேனாம் பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியமர்த்தியும் உத்தரவிட்டார். கமிஷனரின் உத்தரவை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முரளி நேற்று மீண்டும் பணியில் சேர்ந்தார்.

Related Stories:

>