மருத்துவமனை பில் கட்டாததால் கொரோனா நோயாளி சடலம் சாலையில் வீச்சு: குஜராத் டாக்டர் கைது

சூரத்: மருத்துவமனை பில் கட்டாததால் கொரோனா நோயாளியின் சடலத்தை சாலையில் வீசிச் சென்ற குஜராத் டாக்டரை போலீசார் கைது செய்தனர். குஜராத்தின் சூரத் மாவட்டம் பம்ரோலி பகுதியில் தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இதன் உரிமையாளர் டாக்டர் ஜிதேந்திரா படேல். இந்த மருத்துவமனையில் கொரோனா பாதிப்புக்கு ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை  பலனின்றி அவர் நேற்று முன் தினம் இறந்தார். மருத்துவமனை பில் கட்டணத்தை முழுமையாக கட்டினால் மட்டுமே சடலத்தை தர முடியும் என டாக்டர் ஜிதேந்திரா, இறந்தவரின் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

ஆனால் அவர்களால் பில் தொகையை கட்ட முடியாததால், அவர் சாலையில் வீசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இறந்தவரின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர். மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தொற்றுநோய் சட்டத்தின் கீழும், கொரோனா சடலங்களை முறையாக கையாளாதது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்து டாக்டர் ஜிதேந்திராவை கைது செய்தனர்.

Related Stories: