நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சென்னை: நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுடன் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். கொரோனாவால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் தடையின்றி கிடைப்பதற்குத்தேவையான நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலர், மக்கள் நல்வாழ்வுத் துறைச்  செயலாளர் மற்றும் பிற அலுவலர்களுடன் முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஆலோசனை மேற்கொண்டார்.

அப்போது, தமிழகத்தின் ஆக்சிஜன் விநியோகத்தை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், தேசிய ஆக்சிஜன் பகிர்ந்தளிப்புத் திட்டத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ஆக்சிஜன் ஒதுக்கீட்டு அளவை உயர்த்துவதற்கு  மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சிகள் குறித்தும் கேட்டறிந்தார். தமிழகத்தில் உற்பத்திச் செய்யப்படும் ஆக்சிஜனை முழுமையாகப் பயன்படுத்தியும், பிற மாநிலங்களிடமிருந்து பெற்றும் தங்குத் தடையின்றி நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பதை  உறுதி செய்யுமாறு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

Related Stories:

>