சத்தீஸ்கர் மாநிலத்தில் போதைக்காக ஹோமியோபதி மருந்து குடித்த 8 பேர் உயிரிழப்பு: போலீசார் தீவிர விசாரணை

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் போதைக்காக ஹோமியோபதி மருந்து குடித்த 8 பேர் உயிரிழந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலஸ்பூர் மாவட்டம் கோர்மி கிராமத்தை சேர்ந்த சிலருக்கு நேற்று முன்தினம் இரவு முதல் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்களில் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். மேலும், 5 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த உயிரிழப்பிற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். அந்த விசாரணையில் போதைக்காக டோர்சிரா 30 என்ற ஹோமியோபதி மருந்தை அவர்கள் குடித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. போதைக்காக ஹோமியோபதி மருந்தை குடித்த அனைவருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஹோமியோபதி மருந்தை போதைக்காக குடிக்க கொடுத்துவிட்டு 8 நபர்கள் உயிரிழக்க காரணமாக இருந்து தப்பிச்சென்ற ஹோமியோபதி மருத்துவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  

Related Stories:

>