மோசமாகிறது நிலைமை.. வேறு வழி இல்லாமல் கேரளாவில் மே 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிப்பு!!

திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் மே 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. தற்போது கேரளாவில் நிலைமை மிக மோசமாக உள்ளது. ஒரே நாளில் மேலும் 41,953 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். பரிசோதனை பாசிட்டிவிட்டி சதவீதம் குறையவில்லை.எனவே நோய் பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் மே 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மக்கள் இந்த முழு ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளித்து கொரோனாவுக்கு எதிரான போரில் அரசுக்கு உதவ வேண்டும் என்றும் முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இந்த முழு ஊரடங்கின் போது, பால், காய்கறி, மருந்தகம் என அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

Related Stories:

>