அனைத்து மருத்துவமனைகளில் கூடுதலாக 13,185 படுக்கைகள் தயார் ஆரம்ப சுகாதார நிலையங்களும் கொரோனா வார்டாக மாறுகிறது:

* ஆக்சிஜன் வசதியுடன் படுக்கைகள்

* 139 கோடி கேட்டு  அரசுக்கு  பொதுப்பணித்துறை அறிக்கை

சென்னை: தமிழகத்தில் ெகாரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை தொடர்ந்து, மருத்துவமனைகளில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ₹139 கோடி ஒதுக்கீடு செய்யக்கோரி பொதுப்பணித்துறை சார்பில் அரசுக்கு அறிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருத்துவமனைகளை தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் கொரோனா வார்டாக மாற்றப்படுகிறது. மேலும், அங்கு கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கொரோனா பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  குறிப்பாக, மாநிலம் முழுவதும் 35 நாட்களில் 2.50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கொரோனா முதல் அலையை விட 2வது அலையின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சேலம், கோவை, மதுரை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தேனி, தூத்துக்குடி, தஞ்சை, திருச்சி, நெல்லை உட்பட 17க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தினமும் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், சென்னை உட்பட பல இடங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது.

தொடர்ந்து மருத்துவமனைகளுக்கு நோயாளிகள் வந்த வண்ணம் உள்ளனர். இதனால், சென்னை உட்பட பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் 2950 படுக்கைகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 270, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 380, திருவள்ளூர் 184, கோவை 267, சேலம் 437, நெல்லை 500, மதுரை 225, வேலூர் 300, விழுப்புரம் 200, திருவண்ணாமலை 410, கள்ளக்குறிச்சி 410, நாமக்கல் 226, தூத்துக்குடி 958, திருச்சி 385, ஈரோடு 200, தர்மபுரி 22, தஞ்சை 583, விருதுநகர் 585, ராமநாதபுரம் 370, திண்டுக்கல் 220, மதுரை 225, புதுக்கோட்டை 350, மயிலாடுதுறை 140 படுக்கைகள் உட்பட மாநிலம் முழுவதும் ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய 13185 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஏற்கனவே 30 முதல் 200 படுக்கைகள் கீழ் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு வட்டார மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளுக்கும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு படுக்கைகளுக்கு தனித்தனியாக ஆக்சிஜன் குழாய் அமைக்கப்படுகிறது. மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதலாக படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது. இதற்கான பணிகளில் பொதுப்பணித்துறை தீவிரம் காட்டி வருகி றது. இதற்கிடையே மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் உட்கட்டமைப்பு மேம்படுத்தும் அவசர கால பணிகளுக்காக 139 கோடி ஒதுக்கீடு செய்யக்கோரி பொதுப்பணித்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .

Related Stories:

>