எதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் போடியில் ஓபிஎஸ்சை சந்தித்து கே.பி.முனுசாமி ஆலோசனை

போடி: தேனி மாவட்டம், போடி தொகுதியில் அதிமுக சார்பில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டு மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில்,  போடியில் உள்ள தனது வீட்டில் ஓ.பன்னீர்செல்வம் தங்கியுள்ளார். இந்நிலையில், ஓபிஎஸ்சின் ஆதரவாளரான அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர், வேப்பனஹள்ளி எம்எல்ஏகே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார், ஊத்தங்கரை  எம்எல்ஏ தமிழ்ச்செல்வம் ஆகியோர் நேற்று ஓபிஎஸ்ஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஒரு மணிநேரம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.  தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி மேல் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் கண் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழலில் நடந்திருக்கும் இந்த சந்திப்பு அதிமுக வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களை  ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: