அரியாண்டிபுரத்தில் சிவலிங்கம் மீது விழும் சூரிய கதிர்கள்

இளையான்குடி, ஏப்.4: இளையான்குடி அருகே அரியாண்டிபுரம் மாதவ் ஜோதி லிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுக்கு இரண்டு முறை சூரிய கதிர்கள் விழும் அபூர்வ நிகழ்வு நடைபெறுகிறது. செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்த நிகழ்வு நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு நேற்று லிங்கேஸ்வரர் மீது சூரிய கதிர்கள் விழும் நிகழ்வு நடைபெற்றது. இது நாளை வரை தொடரும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். சிவலிங்கம் மீது சூரிய கதிர்கள் விழும் அபூர்வ நிகழ்வை அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

The post அரியாண்டிபுரத்தில் சிவலிங்கம் மீது விழும் சூரிய கதிர்கள் appeared first on Dinakaran.

Related Stories: