வேங்கடேஷ்வரா சுவாமி கோயில் தேர்த்திருவிழா

சூளகிரி, ஏப்.4: சூளகிரி அருகே, திருப்பதி வேங்கடேஷ்வரா சுவாமி கோயில் தேர்த்திருவிழா நடைபெற்றது. சூளகிரி தாலுகா, காமன்தொட்டி ஊராட்சி கோபசந்திரம் கிராமத்தில், தென்பெண்ணை ஆற்றங்கரையோரத்தில் அமைந்துள்ளது வேங்கடேஷ்வரா சுவாமி ேகாயில். 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இக்கோயிலில், தேர்த் திருவிழாவை முன்னிட்டு, 5 நாட்கள் சிறப்பு பூஜைகள், பல்லக்கு ஊர்வலம், நாடகம் நடந்தது. நேற்று காலை, வண்ண பூக்களால் அலங்கரிக்கபட்ட தேரில், திருப்பதி வேங்கடேஷ்வர சுவாமிவை அலங்கரித்து தேரோட்டம் நடந்தது.

பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகிகள், தொழில் அதிபர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நாராயண சுவாமி, ராமமூர்த்தி, ேகாபால் மற்றும் முனிராஜ், பிடிஓ விமல் ரவிக்குமார் மற்றும் வேங்கடேஷ்வரா சேவா நிர்வாகிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கோபந்திரம், ஓசூர், காமன்தொட்டி, பாத்தகோட்டா, அகரம், தொரப்பள்ளி, பேரண்டபள்ளி, உத்தனப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு தேரை இழுத்தனர். அனைவருக்கும் அன்னதானம், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

The post வேங்கடேஷ்வரா சுவாமி கோயில் தேர்த்திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: