கொரோனா குறித்த தகவல்களுக்கு பிரத்யேக இணையதளம்

சென்னை: தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா தொற்றை குறைக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான முன்களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று சோதனை செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் மண்டல அளவில் கொரோனா தடுப்பூசி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா குறித்த முழு தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில், எந்தெந்த மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் என்ன மாதிரியான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பிரத்யேக இணையதளத்தை சென்னை மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி //covid19.chennaicorporation.gov.in/covid/home/. என்ற இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: