கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு வழக்கு: நடிகர் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமின் வழங்கியது சென்னை ஐகோர்ட்

சென்னை: கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு கருத்து வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் மன்சூர் அலிகானுக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி குறித்து புரளி பரப்பக்கூடாது, பதற்ற நிலையை உருவாக்கக்கூடாது என நீதிபதி தண்டபாணி அறிவுறுத்தியுள்ளார். தடுப்பூசி வாங்குவதற்கு ரூ.2 லட்சத்தை சுகாதார செயலர் பெயரில் டி.டி.யாக செலுத்த மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

விவேக் உடல் நிலை, கொரோனா, தடுப்பூசி குறித்து சர்ச்சைப் பேச்சில் சிக்கிய வழக்கில் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்த நிலையில் உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியிருந்தார். நடிகர் விவேக் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வண்ணம் தடுப்பூசி போட்டுக்கொண்டு பேட்டி அளித்தார்.

மறுநாள் வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் மக்களுக்கு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதையடுத்து அவர் மீது சென்னை மாநகராட்சி சார்பில் 10-வது மண்டல சுகாதார அலுவலர் பூபேஷ் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீஸார் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Related Stories: