பாபநாசம் அடுத்த ராமானுஜபுரத்தில் சிதிலமடைந்த சுகாதார வளாகம்,இடிந்த பாலம் சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை

*மக்களின் குரல்

பாபநாசம் : கும்பகோணம்- திருவையாறு மெயின் சாலையில் பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே உள்ளது ராமானுஜபுரம். இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கட்டப்பட்ட சுகாதார வளாகம் கடந்த சில மாதங்களாக முறையான பராமரிப்பு இல்லாததால், சிதிலமடைந்து செடி, கொடி வளர்ந்து பயன்பாடின்றி உள்ளது.

இதனால் பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடத்தை நாடும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே இக்கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டி இந்தப் பகுதி மக்களின் நலன் கருதி பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல மெயின் சாலையிலுள்ள பேருந்து நிழற் குடை அருகிலுள்ள வாய்க்கால் மீதுள்ள பாலத்தின் ஒரு பக்க தடுப்பு கட்டையும் இடிந்து விழுந்து விட்டது. இந்த பாலத்தின் வழியே செலும் வாகன ஓட்டிகள், நடந்து செல்லும் முதியவர்கள், பெண்கள் நலன் கருதி இப்பாலத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: