காளையார்கோவிலில் அலங்கோலமான சமுதாயக் கூடம்-பொதுமக்கள் அவதி

காளையார்கோவில் : காளையார்கோவில் ஊராட்சியில் உள்ள சமுதாயக்கூடம் 20 ஆண்டுகளுக்கு முன் அன்றைய மக்கள் தொகைக்கேற்ப கட்டப்பட்டது. தற்போது காளையார்கோவிலின் மக்கள் தொகை 20,000 மேல் உள்ளது. அதற்கேற்றவாறு சமுதாயக்கூட கட்டிடம், சமையல் அறை, மின்சார வசதி, சுகாதாரமான குடிநீர், கழிப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து பெயர்ந்து விழுந்து கொண்டே இருக்கின்றது. கட்டிடத்தின் ஒரு பகுதியில் சுவற்றின் மீது மரங்கள், செடிகள் வளர்ந்து விரிசல் ஏற்படுத்தி உள்ளது.

சமையல் அறை முறையான பராமரிப்பு இல்லாமல் திறந்தே கிடப்பதினால் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்துவிடுகின்றனர். கழிப்பறை மற்றும் மணமக்கள் அறை பயன்படுத்த முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுகின்றது. இவ்வாறு அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத சமுதாய கூடத்தை அரசு துறை, பல்வேறு சங்கங்கள், கட்சி கூட்டம், சுபநிகழ்ச்சிகள் மற்றும் ஊராட்சிமன்றம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்தி வருகின்றார்கள். எனவே காளையார்கோவில் மக்கள் தொகைக்கு ஏற்ப அனைத்து வசதிகளுடன் சமுதாயக்கூட கட்டிடத்தை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related Stories: