பைத்தான் ஏவுகணை சோதனை வெற்றி

பெங்களூரு: உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் இலகு ரக போர் விமானத்தில் பயன்படுத்துவதுவற்கான, ‘பைத்தான்’ ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடந்தது.  இந்தியாவில் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘தேஜஸ்’ என்ற இலகு ரக போர் விமானம் தயாரிக்கப்பட்டு, விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதை பொருத்தி பயன்படுத்துவதற்காக, ‘பைத்தான்’ என்ற ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தயாரித்துள்ளது. இந்த ஏவுகணையை விமானத்தில் பொருத்துவதில் சிக்கல் இருந்தது. வானில் பறக்கும்போது ஏவுகணையால் விமானத்தின் இறக்கைகளில் அதிர்வுகள் உண்டாவதை நிபுணர்கள் கண்டுபிடித்தனர். இதனால், பைத்தான் ஏவுகணையை உருவாக்கிய இஸ்ரேலின் ரபேல் நிறுவனத்தில், சில திருத்தங்கள் மேற்கொள்ள வலியுறுத்தியது இந்தியா. இதனால் பைத்தான் ஏவுகணையின் வடிவமைப்பு மாற்றப்பட்டது.

பார்வைக்கு அப்பாற்பட்ட தொலைவிலும் சென்று இது தாக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சோதனை கடந்த செவ்வாய்க்கிழமை கோவாவில் நடைபெற்றது. இந்த சோதனையில் டெர்பி ஏவுகணையும், பைத்தான்  5 ஏவுகணையும் தனித்தனியே செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இரண்டும் இலக்கை வெற்றிகரமாக துல்லியாக தாக்கின.

Related Stories: