வேட்பாளர்களின் முகவர்கள் 48 மணி நேரத்துக்கு முன்பாக கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்..: தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அன்று கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மே 2-ம் தேதி அன்று பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, வாக்கு எண்ணப்படும் மையங்களுக்கு வெளியே பொதுமக்கள் கூடக்கூடாது.

மேலும் வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா தொற்று இல்லை என சான்றிதழ் அளித்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களில் அனுமதிக்க வேண்டும். வேட்பாளர்களின் முகவர்கள் 48 மணி நேரத்துக்கு முன்பாக கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களிலும் தேர்தல் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதனை அடுத்து வாக்கு எண்ணும் மையத்தை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் பல கட்டுப்படுகளை அறிவித்துள்ளது.

Related Stories: