பொது நிகழச்சிகளில் பங்கேற்பதை மக்கள் குறைத்துக் கொண்டால் கொரோனா முழுமையாக குறையும்...சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: ஞாயிறு முழு பொது முடக்கத்தால் கொரோனா பரவல் வேகம் சற்றே குறைந்துள்ளது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர் கூறுகையில்; அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது. நோய்க்கட்டுப்பாட்டு பகுதியில் உள்ளவர்கள் கண்டிப்பாக வெளியே வரக்கூடாது என அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா தொற்று ஒரு நாள் குறைந்ததை வைத்து கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என அலட்சியம் கூடாது என்று ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.  

மேலும் வரும் வாரங்கள் கொரோனா தடுப்பில் மிக முக்கியமான கட்டம் என சுகாதாரத்துறை செயலர் எச்சரித்துள்ளார். அதனையடுத்து கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 1.20 லட்சம் என்ற அளவிலேயே இருப்பதாகவும் குறைக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.  பொது நிகழச்சிகளில் பங்கேற்பதை மக்கள் குறைத்துக் கொண்டால் கொரோனா முழுமையாக குறையும். மேலும் மற்ற மாநிலத்தைவிட தமிழகத்தில் கொரோனா குறைவாக இருப்பதை நினைத்து மக்கள் வெளியே வரக்கூடாது. தொடக்கத்தில் கொரோனா தடுப்பூசி போடுவோரின் எண்ணிக்கை 4 ஆயிரம் அளவிலேயே இருந்தது. மேலும் ஏப்ரல் 1 முதல் கொரோனா தடுப்பூசி வீணாவதை 5% ஆக குறைத்துள்ளோம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Related Stories: