உச்ச நீதிமன்றத்தின் 48வது தலைமை நீதிபதியானார் என்.வி ரமணா : நேர்த்தியான தீர்ப்புகளை எழுதிய பெருமைக்குரியவர்!!

டெல்லி : உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்றுக் கொண்டார். சுப்ரீம் கோர்ட்டின்  தற்போதைய தலைமை நீதிபதியாக செயல்பட்டு வருபவர் எஸ்.ஏ. போப்டே. இவர் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் சுப்ரீம் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். போப்டேவின் பதவி காலம் வரும் ஏப்ரல் மாதம் 23ம் தேதியுடன் நிறைவடைகிறது.இதையடுத்து , அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என பரிந்துரை செய்யும்படி, பாப்டேவுக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

இதற்கு பதிலளித்து பாப்டே அனுப்பிய பதில் கடிதத்தில், உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி ரமணாவை நியமிக்கலாம் என பரிந்துரை செய்து இருந்தார். இந்த நிலையில், இந்த பரிந்துரையை ஏற்று உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா பதவியேற்றுக் கொண்டார்.டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதிதாக பதவியேற்று  உள்ள என்.வி. ரமணா 2022 ஆகஸ்ட் மாதம் வரை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவியில் இருப்பார்.நீதிபதிகள் என்.வி.ரமணா, ரோஹின்டன் நாரிமன், யு.யு.லலித், ஏ.எம்.கன்வில்கர் ஆகிய நான்கு மூத்த நீதிபதிகள் இருக்கும் நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவை சேர்ந்த என்.வி.ரமணா 2014ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: