தமிழகத்துக்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்..!

சென்னை: சென்னை: 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை தமிழ்நாட்டுக்கு அனுப்பக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தினசரி 12 ஆயிரத்தை நெருங்கும் நிலை உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் மையங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தடுப்பூசி போட பொதுமக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதால், தடுப்பூசி  மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளது. ஆனால் தற்போது மாவட்டத்தின் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் தமிழகத்தில் கரோனா தடுப்பூசி முகாமை தொடர்ந்து நடத்த ஒவ்வொரு நாளும் 2 லட்சம் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டு, இரண்டாவது டோஸ் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய பயனாளிகள் காத்திருப்பதைத் தவிர்க்க தமிழகத்துக்கு உடனடியாக தடுப்பூசியை அனுப்ப வேண்டும். குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு தேவையான 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை உடனே வழங்க வேண்டும். கொரோனா சிகிச்சையில் அத்யாவசிய மருந்தான ரெம்டிவிவர் விநியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கூடாது.

ரெம்சிடிவிர் தயாரிக்கும் மாநிலங்கள், பிற மாநிலங்களுக்கும் அந்த மருந்தை அனுப்பி உதவ அனுமதிக்க வேண்டும். செங்கல்பட்டில் தயாராக உள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: