திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தடுப்பூசி 2வது டோஸ் போட்டுக்கொண்டார்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 9ம் தேதி முதல்டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். இதை தொடர்ந்து, நேற்று இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டார். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டேன். இதுவரை தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும். வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் தங்கள் மருத்துவரை கலந்தாலோசனை செய்துவிட்டு தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும். நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம்.

இவ்வாறு கூறியுள்ளார்.

* சீதாராம் யெச்சூரி மகன் மறைவுக்கு இரங்கல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: ஆஷிஷ் யெச்சூரியின் இழப்பு ஆழ்ந்த கவலையையும், மன வருத்தத்தையும் தருகிறது. இந்த கடினமான நேரத்தில் தோழர் சீதாராம் யெச்சூரி, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>