பிறந்த நாளை முன்னிட்டு சுப.வீரபாண்டியனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: 70வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார், பேராசிரியர் சுப.வீரபாண்டியன். திராவிட இயக்கத்துக்கு அடித்தளமாகவும் தூணாகவும் இருந்து செயல்பட்ட காரைக்குடி ராம. சுப்பையாவின் மைந்தரான அவர்தான், இன்றும் திராவிட இயக்கத்துக்கு, குறிப்பாக திமுகவுக்கு கொள்கை வழிகாட்டும் கலங்கரைவிளக்கமாக செயல்பட்டு வருகிறார். தனது பேச்சால், எழுத்தால், செயலால் திராவிட இயக்கத்தை வழிநடத்தும் சுப.வீரபாண்டியனுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நம் கொள்கை வெல்ல நூறாண்டும் கடந்து வாழ்க. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories:

>