கர்நாடகாவில் நிலைமை கை மீறிபோய்விட்டது..! கொரோனாவில் இருந்து 2வது முறையாக குணமடைந்த முதல்வர் எடியூரப்பா பேட்டி

பெங்களூரு: கர்நாடகாவில் நிலைமை கை மீறிபோய்விட்டது என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பரவிக் கொண்டிருக்கிறது. முன்பை விட அதிக வீரியத்துடன் பரவி வருகிறது. முதல் அலையின்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டாம் அலையிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பெரும் இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா இருக்கிறது.

இச்சூழலில் கடந்த வருடம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவை மீண்டும் கொரோனா தாக்கியது. கடந்த 18ஆம் தேதி அவருக்குப் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று அவர் பூரணமாகக் குணமடைந்து வீடு திரும்பினார்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், “சிகிச்சைக்குப் பின் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன். இன்று தான் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினேன். குணமடைய வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார். பின்னர் பேட்டி அளித்த அவர் கூறியதாவது; கர்நாடகாவில் கொரோனா பரவல் கைமீறி சென்றுவிட்டது. கொரோனா பரவல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பொதுமக்களை கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன், யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>