நாட்டுக்கு கொரோனா மட்டும் டேஞ்சர் இல்லை… மத்திய அரசும் டேஞ்சர் தான் : ராகுல் காந்தி கடும் தாக்கு!!

டெல்லி : கொரோனா மட்டுமல்லாமல் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளும் இந்தியாவின் பேரிடர் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதனால் ட்விட்டரில் களமாடி வருகிறார். அவ்வப்போது, மத்திய அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து வருகிறார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா தொற்று காரணமாக தனிமையில் இருக்கும் தனக்கு தொடர்ந்து மோசமான செய்திகள் வந்து கொண்டு இருப்பதாக குறிப்பிட்டார். கொரோனா மட்டும் இந்தியாவுக்கான பேரிடர் இல்லை என்று குறிப்பிட்டுள்ள ராகுல் காந்தி, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளும் இந்தியாவின் பேரிடர் தான் என்று விமர்சித்துள்ளார். பொய்யான கொண்டாட்டங்களையும் வெற்று உரைகளையும் விடுத்து நாட்டிற்கு தீர்வை கொடுங்கள் என மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். 

Related Stories:

>