அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவராக மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் தேர்வு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் சுமார் 30 ஆண்டுகளாக வக்கீல் தொழில் செய்துவரும் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் சென்னை உயர் நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவராகவும், தமிழ்நாடு வக்கீல்கள் சங்க தலைவராகவும் செயல்பட்டு வந்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தேர்தலில் வெற்றி பெற்ற இவர், அகில இந்திய பார்கவுன்சிலில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர், அகில இந்திய பார்கவுன்சிலின் இணை தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில், துணைத்தலைவர் பதவி வகித்து வந்த எஸ்.ஏ.தேஸ்முக் ராஜினாமா செய்ததையடுத்து காலியாக உள்ள அகில இந்திய பார்கவுன்சில் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று முன்தினம் டெல்லியில் நடந்தது.

இந்த தேர்தலில் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேஷ் சந்திர ஸ்ரீமாலி மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். எஸ்.பிரபாகரன் சிவில் மற்றும் ரிட் வழக்குகளில் நல்ல நிபுணத்துவம் பெற்றவர்.

Related Stories: