இரவு ஊரடங்கின்போது பொதுமக்களிடம் ‘கண்ணியமாக பேசுங்கள்’: போலீசாருக்கு கமிஷனர் அறிவுரை

சென்னை: கொரோனா தடுப்பு இரவு நேர ஊரடங்கு நேரத்தில், வெளியே வரும் நபர்களிடம் ‘கண்ணியமாக பேசுங்கள்’ என்று வாக்கி டாக்கி மூலம் போலீசாருக்கு கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் அறிவுரை வழங்கி உள்ளார். கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் அரசு உத்தரவுப்படி நேற்று முன்தினம் முதல் இரவு நேர ஊரடங்கு தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சென்ைனயில் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்த பணியில் மாநகரம் முழுவதும் 200 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர். அப்போது, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இரவு ஊரடங்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் ‘வாக்கி டாக்கி’ மூலம் பேசினார். அப்போது, “இரவு ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களிடம் கண்ணியமாக பேசுங்கள், அசம்பாவிதம் நிகழாமல் கவனமாக பார்த்து கொள்ளுங்கள். கடைகள் மூடப்பட்டுள்ளதா என்பதனை கண்காணியுங்கள். மருத்துவ தேவை மற்றும் பிற அவசர தேவைகளுக்கு ெசல்பவர்கள் உரிய ஆவணங்களை பரிசோதித்து அவர்களை செல்ல அனுமதியுங்கள்.

தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்யுங்கள்” என்று அறிவுரை வழங்கி உள்ளார். இந்த அறிவுரையை போலீசார் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

Related Stories: