மனதில் வலியை ஏற்படுத்தியது: நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் கசிவு விபத்தில் உயிரிழந்த 22 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல்.!!!

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த 22 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.  மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் நகரில் உள்ள ஜாகிர் உசைன் மருத்துவமனையில் டேங்கரில் ஆக்சிஜன் நிரப்பும்போது கசிவு ஏற்பட்டது. இந்த கசிவானது 30 நிமிடங்கள் ஆக்சிஜன் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 22 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். மேலும், உயிரிழப்பு அதிகரிக்கலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. நாசிக் மருத்துவமனையில் 300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  தனது டுவிட்டர் பக்கத்தில், ஆக்சிஜன் சிலிண்டரில் கசிவு ஏற்பட்ட விபத்தில் 22 உயிரிழந்ததற்கு தனது டுவிட்பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து வெளியிட்ட பதிவில், 22 பேர் உயிரிழந்த சம்பவம் மனதில் வலியை ஏற்படுத்தியதாகவும், விபத்தில் உயிரிழந்த 22 பேரில் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

Related Stories: