பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொத்ததாக சிறப்பு டிஜிபி மீது தொடரப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்ற ஐகோர்ட் மறுப்பு .

சென்னை: பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொத்ததாக சிறப்பு டிஜிபி மீது தொடரப்பட்ட வழக்கை சிபிஐ-க்கு மாற்ற ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. சிறப்பு டிஜிபி வழக்கு விசாரணையை தனி நீதிபதி கண்காணித்து வருதால் மேற்கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கு அவசியம் இல்லை என கூறியுள்ளது. வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிய முன்னாள் ஒய்வு பெற்ற காவல்துறை கூடுதல் எஸ்பி கே.ராஜேந்திரனின் மனுவை ஐகோர்ட் முடித்து வைத்தது. சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது.  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணையை கண்காணித்து வருகிறார். விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்ககை தாக்கல் செய்யப்படுகிறது.

வழக்கில் ஐபிஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் சிபிசிஐக்கு மாற்றக் கோரி ராஜேந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார். சிபிசிஐடி விசாரணைக்கு நேரில் ஆஜராகி டிஜிபி முழு ஒத்துழைப்பு அளிப்பதாக வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். சிறப்பு டிஜிபி வழக்கறிஞர் விளக்கத்தை ஏற்று வழக்கை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முடித்து வைத்தனர். வழக்கு விசாரணை நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற வேண்டும் எனவும், ஒருதலைப்பட்டசமாக முடிவெடுக்கக் கூடாது என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Related Stories:

>