மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு விழாவை திட்டமிட்டபடி வரும் 29ம் தேதி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி.!!!

சென்னை: வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கிற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்ரன் கோயிலில் திருப்பணிகள் முடிந்து வரும் ஏப்ரல் 29-ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதற்கிடையே, குட முழுக்கு விழாவிற்கு லட்சக்கணக்காணோர் வருவார்கள் என்பதால் விழாவை ஒத்திவைக்க வேண்டும் அல்லது தடை செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு திருக்கோயில், திருமடங்கள் பாதுகாப்பு பேரவை  சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை சார்பில் கொரோனா தடுப்பு விதி கடைப்பிடிக்கப்படும், ஊழியர்களை வைத்தே குட முழுக்கு நடத்தப்படும் என  பதிலளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குடமுழுக்கை திட்டமிட்டபடி வரும் 29ம் தேதி நடத்த தடையில்லை. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கண்காணிக்க மேற்பார்வை குழுவை அமைக்க வேண்டும். கொரோனா விதிகள் மீறப்பட்டால் அதிகப்படியான அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த வழக்கை முடித்து வைத்தது.

Related Stories: