கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு 18 வயதானவர்களுக்கு மே 1ல் இருந்து தடுப்பூசி: கவர்னர் பன்வாரிலால் தகவல்

சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழகத்தில் இயங்கி வரும் 21 பல்கலைக் கழகங்களின் வேந்தராகவும் இருக்கிறார். இந்நிலையில் அனைத்து பல்கலைக் கழக துணைவேந்தர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு ஒன்றை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இணைய தளம் மூலம் நிகழ்த்தினார். அப்போது கொரோனா தொற்று பரவுவதை அடுத்து எப்படி நடந்து கொள்ள வேண்டும், எப்படி தடுப்பது, கொரோனா தடுப்பு ஊசியை மக்களிடையே பிரபலப்படுத்துவது குறித்து துணை வேந்தர்களுடன் விவாதித்தார்.

திருத்தணி: கனகம்மாசத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை திடீரென நேரில் ஆய்வு செய்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்த தடுப்பூசிகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக போடப்படுகிறது. இனியும் காலதாமதம் செய்யாமல் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றார்.

Related Stories: