முரளிதரன் டிஸ்சார்ஜ்

சென்னை: திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம் முத்தையா முரளிதரன் (49), சிகிச்சைக்கு பிறகு நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட் வீழ்த்திய சாதனையாளரான முரளிதரன், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில், சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் அவர் சனிக்கிழமை தனது 49வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் நேற்று முன்தினம் நெஞ்சு வலி ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு ரத்தக்குழாயில் அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையடுத்து ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்டென்ட்டுகள் பொருத்தப்பட்டன. பின்னர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முரளிதரன், 7 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குப் பிறகு அணியுடன் இணைய உள்ளார்.

Related Stories:

>