பிளஸ்2 தேர்வு அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்: தேர்வுத்துறை விளக்கம்

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு அட்டவணை, தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று தேர்வுத்துறை  அறிவித்துள்ளது. தமிழக தேர்வுத்துறை நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு அறிவிப்பில் பிளஸ் 2  மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாகவும், செய்முறைத் தேர்வு தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, அனைத்து  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பின்வருமாறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது.

* பிளஸ் 2 மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் 21ம் தேதி மற்றும் 31ம் தேதிகளில் நடக்க இருந்த பொதுத் தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது.

* பிளஸ் 2 தேர்வுகள் நடக்கும் நாட்கள் குறித்த விவரம், தேர்வுகள் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்படும்.

* தற்போது நடக்கும் செய்முறைத் தேர்வுகள் மட்டும் ஏற்கனவே திட்டமிட்டபடி அரசுத் தேர்வுகள் துறையால் வழங்கப்பட்ட வழிகாட்டு  நெறிமுறைகளின்படி நடத்தப்பட வேண்டும். செய்முறைத் தேர்வுக்கான அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாட்களில் இணைய  தளம் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

Related Stories: