நடிகை ராதாவை 2வது திருமணம் செய்த எஸ்.ஐ. சஸ்பெண்ட்: இணை கமிஷனர் நடவடிக்கை

சென்னை: நடிகை ராதாவை 2வது திருமணம் செய்த எஸ்.ஐ. சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் நடிகை ராதா. சுந்தரா டிராவல்ஸ் படம் மூலம் அறிமுகமானவர். இரு நாட்களுக்கு முன்னர் வடபழனி உதவி கமிஷனர் ஆரோக்கிய ரவீந்திரனிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில், என்னுடைய கணவர் வசந்தராஜா, என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர் திருவான்மியூர் காவல்நிலையத்தில் பணி செய்தபோது எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. அதன்பின்னர் வடபழனி போலீஸ் நிலையத்துக்கு பணி மாறுதல் வாங்கி வந்தார். தற்போது எண்ணூரில் பணியாற்றி வருகிறார். வடபழனி காவல்நிலையத்தில் பணியாற்றும்போது, முதல் மனைவிக்கு தெரியாமல் என்னிடம் குடும்பம் நடத்தினார். ஆனால், கடந்த சில நாட்களாக என்னை அடித்து, உதைக்கிறார். கொடுமைப்படுத்துகிறார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது.இந்நிலையில், நடிகை ராதா குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், நடிகை ராதா ஏற்கனவே 3 பேரை திருமணம் செய்து கொண்டதாக புகார் கொடுத்திருந்தார். தற்போது 4வது திருமணம் நடந்ததாக போலீஸ் எஸ்.ஐ. மீது புகார் கொடுத்துள்ளார் என்று தெரிந்தது. இதனால் இருவரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். ஆனால், திடீரென்று நாங்கள் சமரசமாகி விட்டோம் என்று கூறி புகாரை நடிகை ராதா வாபஸ் பெற்றார். ஆனாலும், எஸ்.ஐ. வசந்தராஜா மீது புகார் வந்ததாலும், இருவரும் சேர்ந்து இருந்த படங்கள் பத்திரிகையில் வெளியானதாலும், போலீஸ் எஸ்.ஐ. வசந்தராஜாவை சஸ்பெண்ட் செய்து, இணை கமிஷனர் லட்சுமி நேற்று உத்தரவிட்டார்.

Related Stories:

>