தோகைமலை சுற்றுவட்டார பகுதியில் புடலங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்

தோகைமலை : கரூர் மாவட்டம் தோகைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் புடலங்காய் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அனைவரும் சமையலுக்கு பயன் படுத்தும் பூசனி வகை குடும்பத்தை சேர்ந்த புடலங்காய், வேகமாக வளர்ந்து ஒரு ஹெக்டேருக்கு 20 டன் முதல் 25 டன் வரை அதிக மகசூலை தரக்கூடிய பயிர் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். புடலங்காய் பயிர் 25 முதல் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப்படும் வெப்ப மண்டல பயிர் என்றும் கூறுகின்றனர்.

புடலங்காய் சாகுபடிக்கு இருமண் பாங்கான மண் வகைகள் ஏற்றவை என்பதாலும் மித வெப்ப மண்டல பகுதிகள் சாகுபடிக்கு ஏற்றவை என்பதாலும் விவசாயிகள் புடலங்காய் சாகுபடியில் ஆர்வம்காட்டி வருகின்றனர்.இதில் கோ 1, கோ 2, பிகேஎம் 1, எம்டியு 1, பிஎல்ஆர்( எஸ்ஜி) 1 ஆகிய புடலங்காய் ரகங்கள் உள்ளதாகவும் கூறுகின்றனர். ஜூன், ஜூலை மாதங்கள் மற்றும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் சாகுபடி செய்ய ஏற்ற பருவம் ஆகும். சாகுபடி செய்யும் நிலத்தை 3 அல்லது 4 முறை நன்றாக உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின்போது தேவைக்கு ஏற்ப மக்கிய தொழு உரத்தை இட்டு 2 மீட்டர் இடைவெளியில் 60 செ.மீ அகலத்தில் வாய்க்கால் எடுத்து சாகுபடிக்கான நிலத்தை தயார்படுத்த வேண்டும். பின்னர் வாய்க்காளில் 1.5 மீட்டர் இடைவெளியில் 45 செ.மீ நீளம், அகலம், ஆழம் கொண்ட குழிகளை எடுத்து நிலத்தின் மேல் மண் கலந்து நிரப்பிவைக்க வேண்டும்.

ஒரு ஹெக்டேருக்கு 1.5 முதல் 2 கிலோ வரை விதை தேவைப்படும், இந்த விதையை 2 கிராம் பெவிஸ்டிக் என்ற பூஞ்சாண மருந்துடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். தொடர்ந்து ஒரு குழிக்கு 5 விதைகள் வீதம் அனைத்து குழிகளிலும் விதைகளை நடவேண்டும். விதை நட்ட 8 முதல் 10 நாட்களில் முளைக்க தொடங்கிவிடும். குழிகளில் நன்றாக முளைத்த 3 நாற்றுகளை தவிர மற்ற நாற்றுகளை பிடுங்கிவிட வேண்டும். பின்னர் ஒவ்வொரு குழிக்கும் 10 கிலோ மக்கிய தொழு உரம், 100 கிராம் அளவிற்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து கலவைகளையும் இடவேண்டும். பு+க்கும் தருவாயில் மேல் உரமாக 10 கிராம் தழைசத்துகளை இடவேண்டும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

வாய்க்கால் மூலம் வாரம் ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதும் என்றும், விதைத்த 15 வது நாளில் ஒரு களையும், 30வது நாளில் 2வது களையும் எடுக்க வேண்டும். அதன் பின்னர் புடலை கொடி வளர்ந்து படருவதற்கு இரும்பு கம்பிகளை வைத்து பந்தல் போட வேண்டும். முளைத்து வளர்ந்து வரும் கொடிகளை மூங்கில் குச்சி அல்லது மற்ற குச்சிகளை கொண்டு பந்தலில் படர விடவேண்டும். விதை ஊண்றி 80 நாட்கள் முடிந்து முதல் அறுவடை தொடங்கிவிடும். ஆதில் இருந்து வாரத்திற்கு 6 முதல் 8 நாட்களுக்கு அறுவடைகள் கிடைக்கும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். மேற்படி வழி முறைகளை கடைபிடித்து சாகுபடி செய்தால் ஒரு ஹெக்டேருக்கு 20 முதல் 25 டன் வரை மகசூழ் கிடைக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

Related Stories: