ரூ.600 கோடி மதிப்பிலான வெள்ளத்தடுப்பு திட்டப்பணிகளை செயல்படுத்த ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி தர சம்மதம்: 60 ஏரிகள் புனரமைப்பு, 15 இடங்களில் தடுப்பணை அமைகிறது

சென்னை: ரூ.600 கோடி மதிப்பிலான வெள்ளத்தடுப்பு திட்டப்பணிகளை செயல்படுத்த ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதி தர சம்மதம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின்போது ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 டிஎம்சி வரை மழை நீர் வீணாக கடலில் கலக்கும் அவல நிலை தான் உள்ளது. மேலும், மழை நீரை சேமித்து வைக்க போதிய கட்டமைப்புகள் இல்லை. இப்பிரச்சனைக்கு முடிவு கட்டும் வகையில் சென்னையில் ரூ.600 கோடி செலவில் 60 ஏரிகள், பாலாறு, அடையாறு, ஆரணியாறு, கொசஸ்தலையாறு உள்ளிட்ட பல்வேறு ஆற்றுப்படுகைகளில் 15 இடங்களில் தடுப்பணை அமைத்து அதில் மழை நீரை சேமித்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் ஏரிகளின் பழைய கொள்ளவை மீட்பதன் மூலம் கூடுதல் நீரை சேமித்து வைக்க முடியும். அதே நேரத்தில் தடுப்பணைகள் அமைப்பதன் மூலம் சேமித்து வைக்கப்படும் நீர் அப்பகுதிகளில் நிலத்தடி நீரை உயர்த்த முடியும்.

மேலும், தடுப்பணைகளில் சேமித்து வைக்கப்படும் நீரை குடிநீர் மற்றும் விவசாயிகளின் பாசன தேவைகளுக்காக திருப்பி விட்டு பயன்படுத்தப்படுகிறது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இதற்காக, பொதுப்பணித்துறை சார்பில் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் வகையில் உலக வங்கி, நபார்டு வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீடு வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளிடம் கடனுதவி கேட்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டப்பணிகளை மேற்கொள்ள நிதி தர ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜைகா) நிதி தர சம்மதம் தெரிவித்தள்ளது. இதை தொடர்ந்து  அடுத்த அரசு அமைந்தவுடன் இந்த திட்டப்பணிகளுக்கு தமிழக அரசின் சார்பில நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு இந்த புதிய திட்டப்பணிகளை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: