தமிழகத்தின் 4 மாவட்டங்களில் 80% வாக்குப்பதிவு: 25 மாவட்டத்தில் 70% தாண்டியது: தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கு அதிகமாகவும், 25 மாவட்டங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகி உள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒட்டு மொத்தமாக 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில், அதிகபட்சமாக கரூர் மாவட்டத்தில் 83.92 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 82.47 சதவீதம், தர்மபுரி மாவட்டத்தில் 82.35 சதவீதம், கள்ளக்குறிச்சியில் 80.14 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. திருவள்ளூர் 70.56 சதவீதம், காஞ்சிபுரம் 71.98 சதவீதம், ராணிப்பேட்டையில் 77.92 சதவீதம் உள்பட 25 மாவட்டங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது. கோவை, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளது. மிக மிக குறைவாக, சென்னையில் மட்டுமே 60 சதவீதத்துக்கும் குறைவாக 59.06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

Related Stories: