கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏதும் இல்லை! கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிர அரசு தவறியுள்ளது: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் குற்றசாட்டு

டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிர அரசு தவறியுள்ளது என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் குற்றசாட்டு கூறியுள்ளார். தடுப்பூசி பற்றாக்குறை குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை. இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறை எங்கும் ஏற்படவில்லை. சில மாநில அரசுகள் தங்கள் தோல்வியை மறைப்பதற்காக, மக்களிடம் கொரோனா பீதியை ஏற்படுத்தி வருவதாக ஹர்ஷ்வர்தன் குற்றச்சாட்டு கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.28 கோடியை கடந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசு கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என கூடுதல் தடுப்பூசிகளை மத்திய அரசிடம் கோரியிருந்தது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடுகள் நிலவுவதாக பெரும் வதந்தி பரவியது.

இதனை மறுத்து பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், சில மாநிலங்கள் தொற்று பரவலைத் தடுக்காமல், இந்த பிரச்னையை திசைதிருப்பவே தடுப்பூசி பற்றாக்குறை என கூறி வருவதாக தெரிவித்துள்ளார். முன்னதாக மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து தெரிவித்திருந்தார். கடந்த மூன்று நாட்களாக போதுமான தடுப்பூசிகள் இல்லையென அவர் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, தடுப்பூசி பற்றாக்குறை என தெரிவித்திருந்த மாநில அரசுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பும் என தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 630 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 1,66,177 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: